Region   

விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையே போர் ஆரம்பமான நாள்

32 வருடங்களிற்கு முன்பு ( October 10, 1987 )


விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையே போர் ஆரம்பமான நாள்

(அக்.10- 1987)

 

 

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1780 - கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை பலியானார்கள்.
* 1868 -
கியூபாவின் முதலாவது விடுதலைப் பிரதேசம் லாடெமஹாகுவா பகுதியில் கார்லோஸ் செஸ்பெடஸ் என்பவர் தலைமையில் அறிவிக்கப்பட்டது.
* 1911 -
வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது.
* 1916 -
வட இலங்கை அமெரிக்க மிஷன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், பட்டிக்கோட்டா செமினறியில் கொண்டாடியது.

* 1942 - சோவியத் ஒன்றியம் ஆஸ்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது.
* 1943 -
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியரின் பிடியில் இருந்த சிங்கப்பூரில் சிங்கப்பூர் துறைமுகம் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக 57 அப்பாவிகள் ஜப்பானியர்களினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.

* 1944 -
இரண்டாம் உலகப் போர்: 800 ஜிப்சி சிறுவர்கள் அவுஸ்விச் வதைமுகாமில் படுகொலை செய்யப்பட்டனர்.
* 1945 -
போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தனர். இது இரட்டை பத்து உடன்பாடு என அழைக்கப்படுகிறது.

* 1949 - விடுதலை பெற்ற இலங்கையின் புதிய ராணுவம் உருவாக்கப்பட்டது.
* 1957 -
ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது.
* 1967 -
விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் ஜனவரி 27-ம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு அமல் படுத்தப்பட்டது.
* 1970 -
பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

* 1970 - மொண்ட்றியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணி தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர்.
* 1971 -
விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட லண்டன் பாலம் அரிசோனாவின் லேக் ஹவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது.
* 1986 - 7.5
ரிக்டர் அளவு நிலநடுக்கம் எல் சல்வடோரின் சான் சல்வடோர் நகரைத் தாக்கியதில் 1,500 பேர் இறந்தனர்.
* 1987 -
விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது